14 மற்றும் 15 வயதான இரு சிறுமிகளிடம் நைசாக பேசி தங்கள் ஊருக்கு அழைத்து வந்த 2 ஆண்கள்! பின்னர் நடந்த பகீர் சம்பவம்
அமெரிக்காவில் இரண்டு சிறுமிகளை தங்கள் ஊருக்கு அழைத்து வந்து போதை மருந்துகளை கொடுத்து சீரழித்த குற்றத்திற்காக இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்த 14 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகளிடம் நைசாக பேசி நார்மன் பெரி (32) என்ற நபர் கடந்த 24ஆம் திகதி நியூ ஜெர்சிக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் தனது நண்பர் டைரில் பீயாசா (31) என்பவருடன் சேர்ந்து சிறுமிகளை ஹொட்டலில் தங்க வைத்திருக்கிறார்.
அங்கு சிறுமிகளுக்கு மது மற்றும் போதை மருந்துகளை நார்மன் மற்றும் பீயாசா இருவரும் கொடுத்துவிட்டு இருவரையும் சீரழித்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் சிறுமிகள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் நார்மன் மற்றும் பீயாசா ஆகிய இருவரையும் கடந்த 2ஆம் திகதி கைது செய்த நிலையில் அவர்கள் மீது சில முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.