செங்கடலில் சேதமடைந்த கடல் வழி கேபிள்: மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகளில் இணைய சேவை பாதிப்பு
செங்கடல் பகுதியில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் சேதமடைந்ததை அடுத்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த இணைய சேவை பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில், கடல்வழி கேபிள் எவ்வாறு சேதமடைந்தது என்ற காரணத்தை வெளியிட்டவில்லை.
ஆனால் மைக்ரோசாஃப்டின் அசுர் என்ற கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பொது இணைய சேவையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் ஞாயிற்றுக்கிழமை 5.45 மணிக்கு இந்த இணைய தடங்கல் ஏற்பட்டதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு
சவுதி அரேபியா, இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக இணைய கண்காணிப்பு அமைப்பான நெட் பிளாக்ஸ் அறிவித்துள்ளது.
மேலும் இதற்கு முக்கிய காரணமாக சவுதி அரேபியாவின் ஜெட்டா அருகே உள்ள SMW4 மற்றும் IMEWE என்ற கேபிள் அமைப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகளே காரணம் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |