பெண்களின் ஆடைகளை அகற்றி சோதனை: வெளியான அதிரவைக்கும் காட்சிகள்
ரஷ்யாவில், புடின் ஆதரவாளரும், கிரெம்ளின் வட்டாரத்துக்கு நெருக்கமானவருமான பெண் ஒருவர் நடத்தும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு வரும் பெண்கள் ஆடைகள் அகற்றப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படும் காட்சிகள் லீக்காகியுள்ளன.
ரஷ்யாவின் ஒன்லைன் வர்த்தக நிறுவனம்
அமேசான் போன்று ரஷ்யாவிலிருந்து செயல்படும் ஒன்லைன் வர்த்தக நிறுவனம், Wildberries நிறுவனம். இதன் உரிமையாளர் Tatyana Bakalchuk (47) என்னும் பெண்.
Credit: East2West
இந்தப் பெண் புடினுக்கு நெருக்கமானவராம். விற்பனைக் கொள்கைகள் குறித்த விடயங்களை இணையவழி கூட்டங்கள் மூலம் Tatyanaவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வாராம் புடின்.
காலையும் மாலையும் சோதனை
இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள், அலுவலகத்துக்குள் நுழையும்போதும், வேலை முடிந்து வெளியே செல்லும்போதும் ஆடைகளை அகற்றி சோதனைக்குட்படுத்தப்படுவார்களாம்.
Credit: East2West
காலையில் அலுவலகத்துக்குள் செல்லும்போது, மொபைல் போன்ற எதையாவது எடுத்துச் செல்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காகவும், மாலை வீட்டுக்குச் செல்லும்போது வேலை செய்யுமிடத்திலிருந்து எதையாவது எடுத்துச் செல்கிறார்களா என்று பார்ப்பதற்காகவும் அதிகாரிகள் தினமும் இந்தப் பெண்களை ஆடைகளைக் களைந்து சோதனையிடுவார்களாம்.
Credit: East2West
விடயம் என்னவென்றால், ஆண்களுக்கும் இதே நிலைதானாம். இந்த செய்தி உண்மையா என்பதை அறிவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாராம். ஆடைகள் களையப்பட்டு அவமானப்பட்டு வேலை செய்த அவர் மூன்றே நாட்கள் வேலையிலிருந்து நின்றுவிட்டாராம்.
Credit: East2West