நிலவில் ஒரு ஏக்கர் 19.95 டொலர் - 611 மில்லியன் ஏக்கரை விற்ற வேலையில்லாத நபர்

United States of America
By Karthikraja Aug 13, 2026 03:09 PM GMT
Report

man selling land in moon : வேலையில்லாத நபர் ஒருவர், நிலவை சொந்தம் கொண்டாடி சுமார் 611 மில்லியன் ஏக்கரை விற்பனை செய்துள்ளார்.

நிலவில் 611 மில்லியன் ஏக்கரை விற்ற நபர்

பூமியில் நிலம் வாங்குவதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்படும் நிலையில், பிரபலங்கள் பலரும் நிலவிலே நிலத்தை வாங்கியுள்ளனர்.

ஆனால், பூமியில் உள்ளதை விட மிகக்குறைவான விலையிலே நிலாவில் நிலம் விற்கப்படுகிறது. 

நிலவில் ஒரு ஏக்கர் 19.95 டொலர் - 611 மில்லியன் ஏக்கரை விற்ற வேலையில்லாத நபர் | Unemployed Man Sold 611 Million Acre Land In Moon

சர்வதேச சட்டப்படி, நிலவை எந்த நாடும் சட்டப்படி உரிமை கொண்டாட முடியாது. ஆனால், அதில் தனிநபர்கள் உரிமை கொண்டாட கூடாது என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. 

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டென்னிஸ் ஹோப் என்பவர், 1967 ஆம் ஆண்டின் விண்வெளி ஒப்பந்தத்தைப் பற்றித் தான் கற்றுக்கொண்ட ஒரு அறிமுக அரசியல் அறிவியல் பாடத்தில் இதனை நினைவு கூர்ந்தார். 

இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்

இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்

இதனை வாய்ப்பாக கருதி சில ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்த டென்னிஸ் ஹோப், 1980 ஆம் ஆண்டில் சந்திரனில் நிலம் விற்கும் முயற்சியை தொடங்கினார். 

நிலவில் ஒரு ஏக்கர் 19.95 டொலர் - 611 மில்லியன் ஏக்கரை விற்ற வேலையில்லாத நபர் | Unemployed Man Sold 611 Million Acre Land In Moon

1980, நவம்பர் 22 அன்று, ஹோப் பூமியைத் தவிர்த்து, முழு சந்திர மேற்பரப்புக்கும், அத்துடன் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்கள் மற்றும் அவற்றின் நிலவுகளின் மேற்பரப்புகளுக்கும் உரிமை கோரி ஒரு பிரகடனத்தைப் பதிவு செய்தார்.

அந்தப் பிரகடனத்தின் நகல்களை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கும் சோவியத் அரசாங்கத்திற்கும் அனுப்பி, தனது உரிமைக்கோரலுக்கு ஏதேனும் சட்டரீதியான ஆட்சேபனைகள் இருந்தால் எழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

அவர்கள் பதிலளிக்காததால் தனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதிய அவர், லூனார் எம்பசி என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் நிலவின் பகுதிகளை விற்று அதற்கான பத்திர சான்றிதழ்களை வழங்க தொடங்கினார்.

பத்திரத்திற்கான கையாளுதல் கட்டணத்துடன் கூடுதலாக, நிலவில் ஒரு ஏக்கர் நிலத்திணை 19.95 டொலருக்கு விற்கத் தொடங்கினார்.

நிலம் வாங்கும் வாடிக்கையாளர்கள், உரிமைச் சான்றிதழ், ஹோப்பின் அசல் பதிவு செய்யப்பட்ட பிரகடனத்தின் நகல், அவர்கள் உரிமை கோரும் நிலவு நிலத்தின் வரைபடம் மற்றும் லூனார் எம்பஸியை ஒரு நிர்வாக அமைப்பாக விவரிக்கும் ஆவணங்களைப் பெறுகிறார்கள்.

இவ்வாறான விற்பனை மூலம், ஹோப் பல கோடிகளை சம்பாதித்துள்ளார்.

அவர் தெரிவித்த புள்ளிவிவரங்களின்படி, நிலவில் சுமார் 611 மில்லியன் ஏக்கர், செவ்வாயில் 325 மில்லியன் ஏக்கர் மற்றும் பிற விண் பொருட்களில் மொத்தம் 125 மில்லியன் ஏக்கர் ஆகியவை அடங்கும்.

சில சமயங்களில் ஒரே நாளில் 1,500 நிலவுப் பத்திரங்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலம் வாங்கியுள்ள பிரபலங்கள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான ரொனால்ட் ரீகன், ஜிம்மி கார்ட்டர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ், ஹாலிவுட் நடிகர்கள் ஜான் டிரவோல்டா, டாம் குரூஸ், நிக்கோல் கிட்மேன் தன்னுடைய வாடிக்கையாளர்கள் என தெரிவித்துள்ளார். 

நிலவில் ஒரு ஏக்கர் 19.95 டொலர் - 611 மில்லியன் ஏக்கரை விற்ற வேலையில்லாத நபர் | Unemployed Man Sold 611 Million Acre Land In Moon

2011 ஆம் ஆண்டில் நிலவின் தென்பகுதியை ஒருவர் 50 மில்லியன் டொலருக்கு வாங்க முன்வந்த போது, எதிர்காலத்தில் அனைத்து மக்களுக்கும் நிலம் குறைந்த அளவில் கிடைக்க வேண்டும் என அதனை ஹோப் நிராகரித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி சட்ட நிறுவனத்தின் தலைவர் டான்யா மாஸன் ஸ்வான், ஹோப்பின் ஆவணங்களை வாங்குவது வாங்குபவர்களுக்கு நிலவின் மீது உரிமைகளை வழங்காது என்று தெரிவித்துள்ளார்.

அந்த ஆவணங்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களாக அமையாது. அது ஒரு சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு நினைவுப்பொருளாக இருக்கும்.

டென்னிஸ் ஹோப்பின் லூனார் எம்பசியை போல் தற்போது ஏராளமான நிறுவனங்கள் நிலவில் நிலத்தை விற்க தொடங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ரசிகை ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் ஷாருக்கானின் பிறந்தநாளுக்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அவருக்கு அதற்கான சான்றிதழை அனுப்பி வருகிறார். 

நிலவில் ஒரு ஏக்கர் 19.95 டொலர் - 611 மில்லியன் ஏக்கரை விற்ற வேலையில்லாத நபர் | Unemployed Man Sold 611 Million Acre Land In Moon

வானியல் மீது ஆர்வம் கொண்ட மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், சுமார் ரூ.55 லட்சத்திற்கு நிலவில் நிலம் வாங்கியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US