இந்திய அணியில் இந்த 2 பேரும் இப்படி போடுவாங்கனு எதிர்பார்க்கல! மிரண்டு போய் இருக்கும் அவுஸ்திரேலியா வீரர்
அவுஸ்திரேலியா அணி வீரரான மேத்யூ வேட், இந்திய அணியில் இரண்டு பேர் சிறப்பாக பந்து வீசி வருவதாக கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. குறிப்பாக இந்திய அணியில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி, அவுஸ்திரேலியா அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதுமட்டுமின்றி அவுஸ்திரேலியாவுக்கு சரியான அழுத்தம் கொடுத்தார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியா அணி வீரரான மேத்யூ வேட், கடந்த இரு போட்டிகளில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
ஆனால், அதே சமயம் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அவுஸ்திரேலியா அணிக்கு நெருக்கடியை கொடுத்ததாகவும், குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னேவிற்கு அவர்கள் மிகுந்த டப் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த போட்டியில் புதிதாக களமிறங்கிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறப்பு சேர்த்தனர்.
அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசியதாகவும் குறிப்பாக இரண்டாவது போட்டியில் அவர்களின் பந்துவீச்சு இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.