எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ

By Ragavan Mar 28, 2023 03:30 AM GMT
Report

ஏராளமான வளங்கள் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லாத 10 நாடுகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உலக மகிழ்ச்சி அறிக்கை

ஐக்கிய நாடுகள் (UN) சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் (Sustainable Development Solutions Network) எனும் அமைப்பால் 2012 முதல் ஆண்டுதோறும் மார்ச் 20-ஆம் திகதி சர்வதேச மகிழ்ச்சி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களிடமிருந்து உலகளாவிய மகிழ்ச்சி அடிப்படையிலான கணக்கெடுப்புத் தரவு வரிசைப்படுத்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2023), 137 நாடுகளை வரிசைப்படுத்தி அறிக்கை வெளியானது.

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un ListEuronews/Canva

சமூக ஆதரவு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை என மகிழ்ச்சியை அளவிடுவதற்கு ஆறு முக்கிய காரணிகளைப் பயன்படுத்தி நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் பின்லாந்து (Finland) முதல் இடம் பிரித்துள்ளது. இலங்கை 112-வைத்து இடத்தையும் இந்தியா 125-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில், இந்த பட்டியலில் கடைசி 10 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள், அதாவது மிகக்குறைந்த அளவில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் எவை என்பதைப் பார்ப்போம்.

1, தாலிபான் பிடியில் சிக்கியுள்ள நாடு

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un ListEbrahim Noroozi / AP

மகிழ்ச்சி அறிக்கையில் கடைசியாக இருக்கும் நாடு ஆப்கானிஸ்தான் (Afghanistan) தான். தலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எக்கச்சக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தீவிர சட்டங்கள் என்று மக்களை அச்சுறுத்தும் பல நிகழ்வுகள் இங்கு அரங்கேறியுள்ளன. வெறும் 1.85 புள்ளிகள் பெற்று மக்களின் திருப்தியின்மையுடன் ஆப்கானிஸ்தான் 137-வது இடத்தில் உள்ளது.

2, பசி, பஞ்சம், வறுமை, மனித கடத்தல், நிறைந்த நாடு 

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un ListAFP/STR

ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக 136-வது இடத்தில் மத்திய கிழக்கு நாடான லெபனான் (Lebanon) இடம்பெற்றுள்ளது. 10 மதிப்பெண் கொண்ட அளவுகோலில் வெறும் 2.39 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது. பசி, பஞ்சம், வறுமை, மனித கடத்தல், போராட்டங்கள் என என பல துயரங்கள் சூழ்ந்து இருக்கும் இந்த நாடு மகிழ்ச்சியை பற்றி சொல்லவே வேண்டாம்.

3, வைரம் உரப்பத்தி செய்யும் முதல் 10 நாடுகளில் இதுவும் ஒன்று

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un ListImage: Saidu Bah / China Dialogue Ocean)

மேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சியரா லியோன் (Sierra Leone) டைட்டானியம், பாக்சைட், தங்கம் போன்ற தாதுக்களின் முக்கிய உற்பத்தியாளராகவும், முதல் பத்து வைர உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஆனால் கடுமையான விதிமுறைகள், அரசாங்க ஊழல், பாலின அடிப்படையிலான வன்முறை, பெண் பிறப்புறுப்பு சிதைப்பு போன்ற காரணங்களால் மகிழ்ச்சியற்ற நாடாக 135-வது இடத்தில் உள்ளது.

4, உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கொண்ட நாடு

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un ListBloomberg

அடுத்தபடியாக 134-வது இடத்தில் இருப்பதும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுதான். 230% என்ற உலகிலேயே அதிக பணவீக்க விகிதம் கொண்ட நாடாக ஜிம்பாப்வே (Zimbabwe) மகிழ்ச்சி இல்லாத நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஆனால் இதே நாட்டில் தான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான விக்டோரியா நீர்வீழ்ச்சி மற்றும் அளவின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியான கரிபா ஏரி உள்ளன.

5, இரண்டாவது பெரிய மழைக்காடு கொண்ட நாடு

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un ListGetty Images

அடுத்து வருவதும் ஒரு ஆப்பிரிக்க நாடு தான். 133-வது இடத்தில் இருப்பது காங்கோ ஜனநாயக குடியரசு (Democratic Republic of Congo) ஆகும். இங்கு கோபால்ட் மற்றும் தாமிரம், நீர்மின் திறன், மகத்தான பல்லுயிர் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு போன்ற செல்வங்கள் உள்ளன. ஆனால், ஆப்பிரிக்காவில் உள்ள ஏழ்மையான நாடுகளில் இதுவும் ஒன்றாகும். கிட்டத்தட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்கும் குறைவான பணம் வைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.

6, குற்ற விகிதம் குறைந்த ஆப்பிரிக்க நாடு

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un Listbritannica

பட்டியலில் 132-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க பகுதியில் உள்ள போட்ஸ்வானா (Botswana) என்ற நாடு உள்ளது. 3.2 புள்ளிகளுடன் இருக்கும் போட்ஸ்வானா மகிழ்ச்சியற்ற நாடாக 6-வது இடத்தில் உள்ளது என்று கூறலாம். இருப்பினும், ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது போட்ஸ்வானாவில் குற்ற விகிதம் குறைவு.

7, விவசாயத்தை பெரிதும் சார்ந்துள்ள நாடு

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un Listblacktomato

அடுத்ததாக 131-வது இடத்தில உள்ள நாடு மலாவி (Malawi) . பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செய்த போதிலும் இந்த ஆப்பிரிக்க நாடு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது விவசாயத்தை பெரிதும் சார்ந்துள்ளது. மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானோர் இதில் வேலை செய்கிறார்கள். அதனால் சிறிய அளவிலான விளைச்சல் மாறுபாடு கூட நாட்டை உலுக்கிவிடக்கூடியதாக உள்ளது.

8, அரசியல் சிக்கல்கள் நிறைந்த நாடு

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un ListImage: Haryamouji

தென்கிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள கொமரோஸ் (Comoros) 3.54 புள்ளிகள் பெற்று மகிழ்ச்சி பட்டியலில் 130-வது இடத்தில் உள்ளது. அதிகப்படியான அரசியல் சிக்கல்களை சந்தித்து வருவதால் இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மக்களை பாரிய அளவில் பாதிக்கின்றன.

9, உலகின் 31-வது பாரிய நாடு

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un List© Getty Images/iStockphoto

அடுத்து வருவதும் தான்சானியா (Tanzania) எனும் ஆப்பிரிக்க நாடு தான். தான்சானியா ஆப்பிரிக்காவில் 13-வது பாரிய நாடு மற்றும் பரப்பளவில் உலகின் 31-வது பாரிய நாடு. கிளிமஞ்சாரோ மலை, சிம்பன்ஸி குரங்குகள் அதிகம் காணப்படும் தான்சானியா 3.69 புள்ளிகள் பெற்று பட்டியலில் 129-வது இடத்தில் உள்ளது. 

10, பிரமிக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள் கொண்ட நாடு

எவ்வளவு வளங்கள் இருந்தும் மகிழ்ச்சியே இல்லாத மக்கள்! உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல் இதோ | Unhappiest Countries In The World 2023 Un List© Eva Mont, Shutterstock

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா128-வது இடத்தில் உள்ளது. பிரமிக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள், ஏராளமான வனவிலங்குகள், பெரிய நீர்நிலைகள் மற்றும் பரந்த திறந்தவெளிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு ஜாம்பியா. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US