ஜேர்மனியில் பின்தங்கிய குழந்தை வளர்ப்புக்கான சூழ்நிலை: அதிர்ச்சியூட்டும் UNICEF அறிக்கை
குழந்தை வளர்ச்சிக்கான சிறந்த சூழ்நிலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜேர்மனி பின் தங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் பின்தங்கிய குழந்தை வளர்ப்புக்கான சூழ்நிலை
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் OECD அமைப்பில் இடம்பெற்றுள்ள 37 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்(UNICEF) சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், குழந்தை வளர்ச்சிக்கான சிறந்த சூழ்நிலைகள் கொண்ட நாடுகளின் தரவரிசையில் ஜேர்மனி 25 வது இடத்தை பிடித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து ஆகியவை குழந்தை வளர்ச்சிக்காக சிறந்த சூழ்நிலைகளை கொண்டு இருப்பதோடு, பட்டியலிலும் முதன்மை இடங்களை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் சிலி(Chile) கடைசி இடத்தை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
ஆய்வில் ஜேர்மனியில் இளைஞர்களின் கல்வித் திறனில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 60% மாணவர்கள் மட்டுமே வாசிப்பு மற்றும் கணிதத்தில் அடிப்படை தேர்ச்சி பெறுகின்றனர், இதனால் ஜேர்மனியின் எதிர்கால மனித வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய தரவுகளின் படி, கல்வித் தரத்தில் 41 நாடுகளில் ஜேர்மனி 34 வது இடத்தில் இருப்பதை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |