பிரான்ஸ், இத்தாலி உட்பட... இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள்
லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
40 நாடுகளும் கடும் கண்டனம்
ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன், அவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் இந்த 40 நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், அமைதிப்படையினரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தாங்கள் கருதுவதாக அந்த 40 நாடுகளும் தங்களின் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஐ.நா அமைதிப்படையினர் மீதான தாக்குதல் என்பது ஒருபோதும் ஏற்க முடியாது என்பதுடன், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய முறைப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் இணைந்து இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்புடையது அல்ல எனறும், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் குண்டு வீச்சு
வெள்ளிக்கிழமை தெற்கு லெபனானில் உள்ள அமைதிப்படையினரின் காவற்கோபுரத்திற்கு அருகில் இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் இரண்டு அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர்.
மட்டுமின்றி, அமைதிப்படையினரின் முதன்மையான முகாம் அருகே இஸ்ரேல் ராணுவம் குண்டு வீச்சும் மேற்கொண்டது. இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களின் எண்ணிக்கையில் அதிக பங்களிப்பை அளித்துவரும் பிரன்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
இதனையடுத்து போலந்து முன்னெடுத்த நடவடிக்கையால், தற்போது பிரான்ஸ், இத்தாலி உட்பட 40 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கை, வங்காளதேசம், பிரேசில், கத்தார், தென் கொரியா, துருக்கி, இந்தியா, வடக்கு அயர்லாந்து, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, மலேசியா உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |