Union Budget 2024: 1 கோடி இளைஞர்களுக்கு Internship உடன் மாதம் ரூ.5000.., பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
2024- 25 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் தாக்கல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 -வது முறை ஆட்சியமைத்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7 -வது பட்ஜெட் இதுவாகும்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, " இந்தியாவில் வரலாற்று சாதனையாக 3 -வது முறை பிரதமராக மோடி பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள். அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நன்றி.
இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. இந்த பட்ஜெட் இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பட்ஜெட் சிறப்பம்சங்கள்
* விவசாயம் டிஜிட்டல் மயமாக்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விவசாய உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு, மனித வள மேலாண்மை மற்றும் சமூக நீதி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட 9 அம்சங்களுக்கு வரும் ஆண்டுகளில் அரசு முன்னுரிமை அளிக்கும்.
* பீகார் மாநிலத்திற்கு பாலங்கள் கட்டுவதற்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கல்விக்கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.
* உற்பத்தி துறையில் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.
* கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
* பெண்களின் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* முத்ரா கடன் திட்டத்திற்கான தொகையை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் 5 கோடி இளைஞர்களுக்கு 500 நிறுவனங்களில் Internship செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். அப்போது அவர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.
* நகர்ப்புற வளர்ச்சி 2.0 திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுவதோடு, 1 கோடி வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சார வசதியும் அமைக்கப்படும்.
* 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
* 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்ச திட்ட அமலாக்கத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ.10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும்.
* ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை ஆகிய 4 சாதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* ஊரக வளர்ச்சிக்குரூ. 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |