அரிய வகை ரத்தம்! உலகளவில் 10வது நபர் கண்டுபிடிப்பு
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அரிதான ரத்தவகை கொண்ட 10வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொதுவான ரத்த வகை A ,B , O, AB ஆகும் இவற்றில் Positive, Negative இரண்டாக பிரிப்பர். இவற்றை தாண்டி அரிதான ரத்த வகை உள்ளது. அதற்கு EMM என பெயரிடப்பட்டது.
ஆனால் உலகளவில் இந்த ரத்த வகையை கொண்டவர்கள் 9 பேர் தான் இருந்தனர். இந்த நிலையில் 10வது நபர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்பட்ட நிலையில், அவரது ரத்த வகையை மருத்துவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து அவரது ரத்த மாதிரிகள் சூரத் நகரில் உள்ள ரத்த மையத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால் எந்த வகை ரத்தத்துடனும் முதியவரின் ரத்த மாதிரி பொருந்தவில்லை.
oneindia
பின்னர் குறித்த நபர் மற்றும் அவரது உறவினர்களின் ரத்த மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட நிலையில், அரிய வகையான EMM Negative முதியவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த ரத்த வகையில் 375 வகையான ஆன்டிஜென்கள் அதிகமாக இருக்கும் எனவும், இந்த ரத்த வகையை கொண்டவர்கள் யாருக்கும் ரத்த தானம் செய்ய முடியாது எனவும், யாரிடம் இருந்து பெற முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
oneindia