ஓடுபாதையில் கழன்று ஓடிய விமானத்தின் சக்கரம்: பரபரப்பு வீடியோ காட்சி
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கிய போது அதன் சக்கரம் ஒன்று கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழன்று ஓடிய விமானத்தின் சக்கரம்
ஞாயிற்றுக்கிழமை சிகாகோவிலிருந்து ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் ஓடுபாதையை தொட்டவுடன் ஒரு முறை துள்ளி எழும்பியது.
இதையடுத்து விமானத்தின் முன்பக்க சக்கரம் கழன்று விழுந்தது, இருப்பினும் விமானி லாவகமாக செயல்பட்டு பத்திரமாக தரையிறக்கினார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வீடியோவாகவும் பதிவாகியுள்ளது.
உயிர் தப்பிய பயணிகள்
#WATCH | United Flight Loses Nose Wheel in Gusty #Orlando Landing
— Deccan Chronicle (@DeccanChronicle) January 19, 2026
Flight UA2323 from #Chicago landed at Orlando International around 12:35 p.m. ET on Sunday amid 54 mph wind gusts from a cold front.
Video from plane spotters showed the Airbus A321 neo bouncing before the nose… pic.twitter.com/twpjgxWJQr
எதிர்பாராத விபத்தைத் தொடர்ந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விமானத்தில் மொத்தம் 200 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் இருந்த நிலையில் அனைவரும் பத்திரமாக விமான முனையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |