UAE-யில் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வும், வரலாறும்: தொடரும் கலாச்சார இணைப்பு
தெற்கு இந்திய துணைக் கண்டப் பகுதியில் இருந்து (தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கை) வெவ்வேறு நாடுகளுக்கு சென்ற தமிழ் மொழி பேசக்கூடிய மக்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் மலேசியா, பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகள், தென் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெருமளவு பரவி வாழ்கின்றனர்.
அத்துடன் இவர்கள் நிலப்பரப்பு, கலாச்சாரம், வரலாற்று ஆகிய காரணங்களால் இந்திய தமிழ் புலம்பெயர்ந்தவர்கள், இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
பெரும்பாலான இந்திய தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் காலனித்துவ காலத்தில் தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் பிஜி ஆகிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர்.
தற்போது உள்ள படித்த தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் 1980 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முதன்மையாக கனடா, வட மற்றும் தென் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழத்தொடங்கினர்.
தற்போது உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக செல்ல தொடங்கியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள்
20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் திறமையான நிபுணர்களாக தமிழர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாடுகளுக்கும் புலம்பெயர தொடங்கினர்.
இவர்களில் பலர் இன்னும் தமிழ்நாட்டுடன் சொந்த மற்றும் கலாச்சார இணைப்பை கொண்டுள்ளனர்.
ஆனால் 1950ம் ஆண்டுகளுக்கு முன்னதாக புலம்பெயர்ந்து சென்றவர்களில் பலர் தமிழ்நாட்டுடனான தங்களது மூதாதையர் இணைப்புகளை இழந்துள்ளனர்.
UAE-யில் தமிழர்கள் மக்கள் தொகை
2015ம் ஆண்டு நடத்தப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் தமிழர்கள் கணக்கெடுப்பின் படி, பல துறைகளில் தொழில் வல்லுநர்களாகவும், தொழிலாளர்களாகவும் தமிழ்நாட்டில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிட்டத்தட்ட 400,000 புலம்பெயர்ந்தவர்கள் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில், பிற நாடுகளில் இருந்து வரும் தமிழ் இன மக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலாச்சாரம் மற்றும் திருவிழா
துபாய் மற்றும் சில மாநிலங்களில் பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் தாக்கம்
தவிர்க்க முடியாத நிலையில் தமிழர்கள் நிலை உயர்ந்ததை அடுத்து 2014ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி மத்திய கிழக்கு நாடுகளின் முதல் தமிழ் பத்திரிகை துபாயில் இருந்து வெளியிடப்பட்டது.
மேலும் தமிழ் 89.4 FM வானொலி துபாயிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் வானொலியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |