UAE Tourism: அமீரக சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள்
நவீன அதிசயங்கள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் கலவையாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் குறித்து இங்கே காண்போம்.
துபாய்
புர்ஜ் கலீஃபா: அமீரகத்தின் பிரதான சுற்றுலா நகரமாக இருப்பது துபாய். இங்குள்ள புர்ஜ் கலீஃபா உலகின் மிக உயரமான கட்டிடமாக உள்ளது.
மேலும் துபாயில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. மில்லியன் கணக்கான பயணிகள் இங்கு ஒவ்வொரு ஆண்டு வருகை தருகின்றனர்.
பாம் ஜுமைரா: பாம் ஜுமைரா (Palm Jumeirah) என்பது துபாயில் பார்க்க சிறந்த இடமாகும். இது அரபிக்கடலில் நடுவே உள்ள அற்புமான கட்டிடக்கலையின் பிரதிபலிப்பு.
சாகசப்பிரியராக இருப்பவர்கள் பனை, நீல வண்ண கடல் மற்றும் துபாய் வானலையின் அற்புத காட்சிகளை வழங்கும் மோனோரயில் சவாரி செய்யலாம்.
உயிரியல் பூங்கா: திகைப்பூட்டும் பாலைவன நகரத்தின் மையத்தில் மீன்வளம் மற்றும் நீருக்கடியில் உயிரியல் பூங்காவின் கவர்ச்சிகரமான உலகை காணலாம்.
இங்கு கடல்வாழ் உயிரினங்களின் துடிப்பான திரைச்சீலையுடன் கூடிய பரந்த மீன்வளத்தால் பார்வையாளர்கள் சூழப்படுவர்.
அதேபோல் நீருக்கடியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு பார்வையாளர்கள் சென்றவுடன் நட்சத்திர மீனைத் தொடவும், கடல் குதிரைகளை கவனிக்கவும், ஜெல்லிமீன்களின் நடனத்தைப் பார்க்கவும் கூடிய சாகசப் பயணத்தில் மூழ்கி விடுவார்கள்.
அபுதாபி
UAE-யின் நகை என்று அழைப்பதும் நகரம் அபுதாபி. இந்நகரம் சாத்தியமான அனைத்து சுற்றுலா இடங்களையும் வழங்குகிறது.
சாதியத் பொது கடற்கரை: அபுதாபியின் இந்த கடற்கரை பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.
தங்கள் துணையுடன் Hangout செய்யவும், புத்துணர்ச்சியுடன் குளிக்கவும், நீர் விளையாட்டுகளை அனுபவிக்கவும் இது சிறந்த இடமாக உள்ளது.
இந்த கடற்கரை உள்ளூர் உணவுகள், குடில்கள் மற்றும் சந்தைகளுக்கு பிரபலமானது.
பாலைவன சஃபாரி: பாலைவனங்களுக்கு பிரபலமான UAE-யில் பாலைவன சஃபாரி மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். Dune driving இங்கு அலாதியான அனுபவத்தை தருமாம்.
ஃபெராரி வேர்ல்ட் (Ferrari World): அபுதாபியில் பார்க்க சிறந்த மற்றொரு இடம் இது. இங்குள்ள சவாரிகள், நிகழ்ச்சிகள் சிலிர்க்க வைக்கும்.
ஃபார்முலா ரோசா எனும் ரோலர் கொஸ்டர் உலகின் அதிவேக கோஸ்டர் பயணத்தை தரும் ஒன்றாகும். ஒரே ஒரு சவாரிக்காக இங்கு சுற்றுலாப்பயணிகள் குவிகின்றனர்.
ஷார்ஜா
இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற ஷார்ஜா, UAE-யின் கலாச்சார தலைநகராக உள்ளது.
இங்குள்ள அருங்காட்சியகம் ஒரு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாகும். ஷார்ஜாவில் உள்ள Blue Souk எனும் சென்ட்ரல் மார்க்கெட், அதன் சிக்கலான நீல ஓடு வேலைகளுக்குப் புகழ்பெற்றது.
துபாயை விட பழமைவாத நெறிமுறைகளைப் பராமரிக்கும் நகரமாக உள்ள ஷார்ஜா, கடுமையான மதுவிலக்குக் கொள்கை மற்றும் ஆடைக்கட்டுபாடுகளை கடைப்பிடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |