Photoshop விவகாரம்... இளவரசி கேட்டை வம்புக்கிழுத்த அமெரிக்கா
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், அன்னையர் தினத்தையொட்டி வெளியிட்ட புகைப்படம் ஒன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதால் எழுந்த சர்ச்சை அமெரிக்காவிலும் எதிரொலித்துள்ளது.
இளவரசி கேட்டை வம்புக்கிழுத்த அமெரிக்கா
இளவரசி கேட் வெளியிட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது தொடர்பிலான சர்ச்சைகள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குத் தெரியுமா என, வெள்ளை மாளிகை முதன்மை செய்தித்தொடர்பாளரான Karine Jean-Pierre என்பவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த Karine, பிரித்தானியாவில் நடக்கும் விடயங்களுடன் நம்மை ஒப்பிடுகிறீர்களா என்று பதிலுக்கு கேள்வி எழுப்பியதுடன், நமக்கும் ராஜ குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்றும், நாம் அப்படியெல்லாம் செய்வதில்லை, அதாவது, வெள்ளை மாளிகையில் புகைப்படங்களை Photoshop செய்வதில்லை என்றும் கூறினார்.
Credit: The Prince of Wales, 2024
அதே நேரத்தில், ஜோ பைடன் நிர்வாகம், இளவரசி கேட் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாக தெரிவித்த அவர், நான் அத்துடன் நிறுத்திக்கொள்கிறேன், அந்த விடயம் தொடர்பாக பகிர்ந்துகொள்வதற்கு என்னிடம் வேறு எதுவுமில்லை என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |