கட்டாய முகக்கவசம்: ஜோ பைடன் நிர்வாகத்தின் ஆணையை நிராகரித்த நீதிபதி!
கோவிட்-19 தொற்று மீண்டும்திகரித்து வரும் அமெரிக்க நீதிபதி ஒருவர் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் பொது போக்குவரத்துக்கான கட்டாய முகக்கவச ஆணையை நிராகரித்தார்.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில், மாவட்ட நீதிபதி கேத்ரின் கிம்பால் மிசெல் (Kathryn Kimball Mizelle), அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கட்டாய முகக்கவச உத்தரவு சட்டவிரோதமானது என்று அறிவித்தார், அதே நேரத்தில் இது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சிடிசி) சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறுகிறது என்று கூறினார்.
சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அதிகாரிகள் விமானங்கள் மற்றும் டாக்சிகள் உட்பட பொது போக்குவரத்துக்கான முகக்கவச ஆணையை 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 2021-ல் ஹெல்த் ஃப்ரீடம் டிஃபென்ஸ் ஃபண்ட் என்ற குழு அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெறிவித்துள்ளது. அமெரிக்க போக்குவரத்து நிர்வாகம் உத்தரவை அமல்படுத்த பாதுகாப்பு உத்தரவை வெளியிட்டதால், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் மக்கள் முக்கவசங்களை அணிய வேண்டும் என்று CDC பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தது.
புளோரிடா நீதிமன்றத்தால் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, யுனைடெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகியவை முகக்கவச வழிகாட்டுதலை கைவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிபதியின் முடிவு ஏமாற்றமளிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், "பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவதை CDC தொடர்ந்து பரிந்துரைக்கிறது" என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் BA.2 Omicron வகை வைரஸால் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்காவில் 86 சதவீத கொரோனா வைரஸ் வழக்குகளுக்கு BA.2 Omicron காரணமாக இருப்பதாக CDC கடந்த வாரம் கூறியது.