1971-ம் ஆண்டில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில்.., பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கிய அமெரிக்கா
1971-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கியது தொடர்பான நாளிதழை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவம் வெளியிட்ட நாளிதழ்
கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்படி, வங்கதேசம் விடுதலை அடைந்து தனி நாடாக உதயமானது.
இந்நிலையில் கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கியது தொடர்பான தகவலை இந்திய ராணுவம் பகிர்ந்துள்ளது.
அதாவது 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் திகதி அன்று வெளியான நாளிதழ் பதிவை பகிர்ந்துள்ளது. அதில், "1971-ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கியுள்ளது" என்று கூறியுள்ளது.
மேலும், அந்த நாளிதழில் அப்போதைய அமைச்சர் வி.சி. சுக்லா மாநிலங்களவையில் அளித்த விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, "பாகிஸ்தானுக்கு யாரும் ஆயுதம் வழங்கக்கூடாது என்று நேட்டோ, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் வலியுறுத்தியதால் ஆயுதம் வழங்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. ஆனால், பாகிஸ்தானுக்கு மிக குறைந்த விலையில் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
1954-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. அதேபோல, சீனாவும் மிக குறைந்த விலையில் வழங்கியுள்ளது" என்று அமைச்சர் கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதால் இந்திய ராணுவம் பகிர்ந்த இந்த நாளிதழ் பேசுபொருளாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |