ஈரான் அருகே பயணித்த வணிக கப்பல் மீது வீசப்பட்ட மர்ம பொருள்: UKMTO விடுத்த எச்சரிக்கை
unknown projectile hits vessel near iran coast: ஈரானின் கடலோர பகுதியில் அருகே பயணித்த கப்பல் மீது மர்ம பொருள் தாக்கியதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பல் மீது மர்ம பொருள் கொண்டு தாக்குதல்
வெள்ளிக்கிழமை ஈரானின் லாவான் தீவுக்கு தெற்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் பயணித்து கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது மர்ம பொருள் தாக்கியதாக பிரித்தானிய கடற்படை வர்த்தக அமைப்பு (UKMTO) தகவல் தெரிவித்துள்ளது.
கப்பல் சென்று கொண்டிருந்த போது கப்பலின் இடது பக்கத்தில் மர்ம பொருள் ஒன்று மோதியது, இதனால் கப்பலின் சில பகுதிகளில் திடீரென தீப்பிடித்தது.
இந்த திடீர் தாக்குதலினால் கப்பலில் இருந்த மாலுமிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலால் கடலில் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்போ அல்லது எண்ணெய் கசிவோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம பொருள் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து கடற்படை அதிகாரிகள் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் UKMTO தெரிவித்துள்ளது.