தித்திக்கும் சுவையில் உண்ணியப்பம்.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பியுண்ணும் உண்ணியப்பம் கேரளாவின் பாரம்பரிய உணவாகும்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் உண்ணியப்பம் இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை அரிசி- 1 கப்
- ஏலக்காய்- 3
- வாழைப்பழம்- 2
- வெல்லம்- 1 கப்
- நெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் துண்டுகள்- 15
- கருப்பு எள்- ½ ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி உலரவைத்து எடுத்து அதனையுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுத்து வாணலில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி மாவில் செத்தது கலக்கவும்.
அடுத்து இதில் மசித்த வாழைப்பழம் மற்றும் கருப்பு எள்ளை சேர்த்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து வாணலில் நெய் சேர்த்து அதில் தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக பொறித்து இதில் சேர்த்து கலக்கவும்.
இறுதியாக அடுப்பில் ஒரு குழிப்பணியார சட்டியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து சூடாக்கவும்.
பின்னர் இதில் மாவை ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான உண்ணியப்பம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |