3000 ஆண்டுகால மர்மம் விலகியது: மம்மி டிஜிட்டல் முறையில் ஆய்வு
Unravelled mystery of egypt mummy braided lady:தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்திய Braided Lady மம்மியை டிஜிட்டல் முறையில் திறந்து ஆய்வு செய்தனர்.
Braided Lady பண்டைய எகிப்தியப் பெண் ஒருவர் குறித்த மர்மங்கள், 3000 ஆண்டுகள் கழித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Braided Lady
பண்டைய எகிப்தியப் பெண் ஒருவரின் மம்மி உடலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த மம்மி Braided Lady (பின்னல் கொண்ட மங்கை) என்று அழைக்கப்படுகிறது. இதனைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தற்போது உயர் தெளிவுத்திறன் கொண்ட CT ஸ்கேன்களைப் பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் திறந்து பார்த்து மர்மத்தை கண்டுபிடித்துள்ளனர்.
அப்பெண்ணின் பற்களில் இருந்து ஒரு மிகவும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு கிடைத்தது. பண்டைய எகிப்தில் பொதுவாகக் காணப்பட்ட மணல் கலந்த கரடுமுரடான உணவின் விளைவாக, அவளுடைய பற்கள் மிகவும் தேய்ந்து சேதமடைந்திருந்தன.
மேலும் அந்த ஸ்கேன்களில் ஈறு நோய், உடைந்த கடைவாய்ப் பல் மற்றும் தொண்டையை நோக்கி இடம்பெயர்ந்த ஒரு வெட்டுப்பல் ஆகியவையும் தெரியவந்தன.
இறந்தவரின் புலன்களை மறுவாழ்விற்காக
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் குழு, 'Radiology Case Reports' என்ற இதழில், "பண்டைய எகிப்தியர்களின் கடினமான உணவுப் பழக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பல் தேய்மானமும் நோயியலும் காணப்பட்டன. அத்துடன் தனித்துவமான பல் கண்டுபிடிப்புகள் 'வாயைத் திறக்கும்' சடங்கில் அவள் பங்கேற்றதைக் காட்டின" என்று எழுதியுள்ளது.
இந்த வழக்கம் மரணத்திற்குப் பிறகு செய்யப்பட்டது என்றும், இறந்தவரின் புலன்களை மறுவாழ்விற்காக மீட்டெடுப்பதே இதன் நோக்கமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் பெண் 1077 பொ.ஊ.மு முதல் பொ.ஊ.மு 1292 வரையிலான காலக்கட்டத்தில், அதாவது அந்த நாகரிகம் அதன் உச்சத்தில் இருந்த சுமார் 3,000 முதல் 3,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆய்வின் முடிவில், இந்த மம்மியின் உடல் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது; எலும்புகள் மற்றும் மென்மையான திசுக்கள் என அனைத்தும் இன்னும் அப்படியே காணப்படுகின்றன.
