ஐரோப்பிய நாடொன்றில் அகதிகள் முகாமில் வெடித்த மோதல்: தப்பியோடிய 35 கைதிகள்
கிரீஸ் உள்ள புலம்பெயர்வோர் முகாமில் ஏற்பட்ட மோதலின் போது கைது தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்வோர் முகாமில் மோதல்
வடக்கு கிரீஸ் நாட்டின் தற்காலிக புலம்பெயர்வோர் முகாமில் வார இறுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பல கைதுகள் அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கேரிய நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த முகாமின் வெளிப்புற வேலியை அறுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 35 கைதிகள் தப்பியோடியதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் தப்பியோடியவர்களில் பாதி பேரை மீண்டும் கைது செய்து முகாமில் அடைத்தனர்.
மீதமுள்ளவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஓராண்டு காத்திருப்பு பின்.,இந்திய ஆண்களை திருமணம் செய்த 150 பாகிஸ்தான் பெண்கள்: ஓராண்டு காத்திருப்பு
காவல்துறையினர் மீது தாக்குதல்
சிண்டிகி(Sintiki) என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த முகாமில் தஞ்சம் கோரி வந்த விண்ணப்பத்தாரர்கள் சுமார் 450 பேர் அரசின் முடிவுக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வார இறுதியில் முகாமில் இருந்தவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை அதிகாரிகள் தீவிரமாக போராடினர். மேலும் இந்த மோதலின் போது கண்ணீர் புகை மற்றும் ஒலி குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |