100 அடி உயரத்திற்கு துள்ளிக் குதித்து தாக்கும் ரஷ்யாவின் ஸ்மார்ட் ஆயுதம்: வெளியாகியுள்ள பிரமிக்கவைக்கும் காட்சிகள்
எதிரி நாட்டு போர் வாகனங்கள் வரும்போது, அவற்றை சரியாக அடையாளம் கண்டு, 100 அடி உயரத்திற்கு துள்ளிக் குதித்து, குறிவைத்துத் தாக்கி அழிக்கும் ரஷ்யாவின் ஸ்மார்ட் ஆயுதம் ஒன்றைக் குறித்த பிரமிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி, உக்ரைன் வயல் ஒன்றில் ரஷ்ய கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறித்த செய்தி ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டிருந்தது.
தற்போது, அந்தக் கண்ணிவெடி குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
PTKM-1R என்று அழைக்கப்படும் அந்தக் கண்ணிவெடி, நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும். அந்த வழியாக எதிரி நாட்டுப் போர் வாகனங்கள் வரும்போது, சரியாக அதை அடையாளம் கண்டு, அந்தப் போர் வாகனம் நெருங்கும் நேரத்தில், 100 அடி உயரத்திற்குத் துள்ளிக் குதித்து, தன்னை நோக்கி வரும் போர் வாகனத்தைக் குறிவைத்து குண்டுகளை வீசும் அந்த ஸ்மார்ட் கண்ணிவெடி!
சமீபத்தில், tank என்று அழைக்கப்படும் போர் வாகனங்களை வானிலிருந்து தாக்கி அழிப்பது எவ்வளவு எளிது என்பதைக் குறித்த செய்திகள் சில வெளியாகின. இந்த tankகள் தடிமனான உலோக சுவர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றிற்குள் எதிரிகளைத் தாக்குவதற்கான வெடிகுண்டுகளும் வைக்கப்பட்டிருக்கும்.
ஆக, ட்ரோன்களை அனுப்பும் எதிரிப்படை, வானிலிருந்து அந்த tankஐத் தாக்கும்போது, அந்த ட்ரோனிலிருந்து வீசப்படும் குண்டு tankஐத் தாக்க, ஏற்கனவே tankகுக்குள் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் வெடித்துச் சிதற, ’சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது போல’ என ஒரு சொல் வழக்கு உண்டு, அதுபோல, tankக்குக்குள் இருக்கும் வீரர்கள் கதி அதோகதிதான்.
இப்படியிருக்கும் நிலையில், இப்படி வானில் துள்ளிக்குதித்து தாக்கும் கண்ணிவெடிகள் குறித்த விடயம் வேறு வெளியாகி அச்சுறுத்தியுள்ளது.
ஆனால், இந்த கண்ணிவெடிகள் உக்ரைன் tankகளைத் தாக்கி அழித்ததா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.