குப்பையில் இருந்து தங்கம் தயாரிக்கும் இயந்திரம் - பாஜக அமைச்சர் அறிவிப்பு
குப்பையில் இருந்து தங்கம் தயாரிக்கும் இயந்திரத்தை தயாரித்து வருவதாக உத்திரப்பிரதேச அமைச்சர் பேசியது வைரலாகி வருகிறது.
பண்டைய காலத்தில் இருந்த தங்கம் உலகளவில் மதிப்புமிக்க பொருளாக இருந்து வருகிறது. தற்போதும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல பலனை வழங்குகிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சாமானியர்களுக்கு தங்கம் வாங்குவது கனவாக மாறி வருகிறது.
குப்பையில் இருந்து தங்கம்
இந்நிலையில், குப்பைகளில் இருந்து தங்கத்தை உருவாக்கும் இயந்திரத்தை தயாரித்து வருவதாக உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
"आलू से सोना बनाने की मशीन" की अपार सफलता के बाद...
— Narendra Pratap (@hindipatrakar) May 26, 2025
"यहां कूड़े से कंचन बनाने की योजना है यानी कूड़े से सोना बनाना. वो मशीन जल्दी तैयार हो जा रही है. थोड़ी समस्या है. जब हो जाएगी तो #मेरठ में कूड़े से सोना बनेगा"
माननीय धर्मपाल सिंह, मंत्री, उत्तर प्रदेश सरकार pic.twitter.com/TwU0O0r92t
செய்தியாளரிடம் பேசிய உத்தரப்பிரதேச கால்நடை வளர்ப்பு மற்றும் பால் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்ம்பால், "குப்பைகளில் இருந்து தங்கம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி வருகிறோம். சில சிக்கல்களால் அந்த திட்டம் தாமதமாகி வருகிறது. அந்த இயந்திரம் தயாரானதும் மீருட்டில் உள்ள குப்பைகளில் இருந்து தங்கம் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஈய அணுக்கருக்களை அதிவேகத்தில் மோதச் செய்து, மிகக் குறுகிய காலத்திற்கு தங்க அணுக்களை உருவாக்க முடியும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பான CERN-ல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அகிலேஷ் யாதவ் பதிலடி
இந்நிலையில், குப்பையில் இருந்து எப்படி தங்கம் தயாரிக்க முடியும் என அமைச்சர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள எதிர்க்கட்சி அகிலேஷ் யாதவ், "குப்பையை தங்கமாக மாற்றும் இயந்திரங்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு, கண்ணோஜில் ஏற்கனவே கட்டப்பட்ட பசும்பால் ஆலையை செயல்படுத்தி, பால் உற்பத்தியாளர்களுக்கு சில வருமானத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவரின் பேச்சு சாத்தியமில்லாதது என தெரிந்தும் இவ்வாறு பேசுகிறார். இந்த பேச்சை கேட்கும் உத்திரப்பிரதேச மக்கள் பாக்கியவான்கள்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |