30 ஆண்டுகளுக்கு பிறகு…ஆண் உடலில் இருந்து நீக்கப்பட்ட பெண் உறுப்புகள்
உத்தர பிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பெண் உடல் உறுப்புகளுடன் பிறந்த ஆண் ஒருவருக்கு உறுப்புகள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆண்
உத்தர பிரதேசத்தில் பிறக்கும் போதே கருப்பை, கரு முட்டை உள்ளிட்ட பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆண் ஒருவருக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.
ஆண் நபர் ஒருவருக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் கருப்பை, கரு முட்டை உள்ளிட்ட பெண் உறுப்புகளை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
மரபணு நோய்
Persistent Mullerian duct syndrome என்ற மரபணு நோய் காரணமாக இது ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் 300-க்கும் குறைவானவர்களுக்கே இது போன்ற குறைபாடுகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.