காதலிக்காக மனைவி, குழந்தைகள், நண்பனை கொன்றுவிட்டு தப்பிப்பதற்காக கணவன் செய்த பயங்கர திட்டம்! சினிமாவையே மிஞ்ச வைத்த சம்பவம்
இந்தியாவில் காதலிக்காக மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு, கணவனும் இறந்துவிட்டதாக நம்பப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் Rajesh. தற்போது 35 வயதாகும் இவருக்கும், Ratnesh(27) என்பவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது.
இதையடுத்து இந்த தம்பதிக்கு Avni மற்றும் Arpit என இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று Rajesh மற்றும் அவரின் மாமானார், அதாவது Ratnesh-ன் தந்தை அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பின் அவ்வப்போது இந்த புகார் தொடர்பாக பொலிஸ் விசாரணைக்கு வந்து கொண்டிருந்த இவர், திடீரென்று அதன் பின் காணவில்லை.
இவர் தொடர்பாக நடத்திய விசாரணையின் போது, அப்பகுதியில் கை மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடந்துள்ளது. இது காணமல் போன ராஜேஷின் சடலமாக இருக்கலாம் என்று பொலிசார் அவரின் தந்தையான Banwari-யிடம் காட்டிய போது, இவர் என் மகன் தான் என்று கூறியுள்ளார்.
அதன் பின் பொலிசார் டி.என்.ஏ சோதனை மேற்கொண்ட போது, ஒத்துப் போகாத காரணத்தினால், இவர் வழக்கு விசாரணை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் உயிரிழந்ததாக நம்பப்பட்ட Rajesh ஹரியானாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் Rajesh-க்கு Ruby என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு Ratnesh தொந்தரவாக இருந்த காரணத்தினால் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
Ruby ஒரு பெண் கான்ஸ்டேபிள். அதுமட்டுமின்றி Rajesh தடவியல் ஆய்வு அலுவலகத்தில் எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இதனால் ஒரு கொலை செய்தால், அதில் எப்படி தப்பிப்பது என்பது தொடர்பான பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார்.
இந்த கொலையை மறைப்பதற்கு, அவர் உடலுடன் ஒத்துப் போகும், அவருடைய நெருங்கிய நண்பரான Rajendra-ஐ கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை செய்து, அவரது கை மற்றும் கால்களை தனியாக வெட்டி அப்பகுதியில் போட்டுவிட்டு, அப்போது இறந்தது நான் தான் என்று நம்புவதற்காக அவருடைய ஐடி கார்ட் மற்றும் ஆதார்கார்ட் போன்றவற்றை அங்கே விட்டுச் சென்றுள்ளார்.
அவரின் தந்தை பார்த்த போது கூட, இது தன் மகன் தான் என்று நம்பும் அளவிற்கு இந்த கொலையை திட்டமிட்டு செய்துள்ளார். மேலும், தன்னுடைய முக அடையாளத்தை மாற்றுவதற்காக மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஹரியானாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் லேபராக வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால், பொலிசாருக்கு விசாரணையின் போது Ruby பெயர் அடிபட, அவருடைய போனை ஆய்வு செய்து பார்த்த போது, அவருடைய தொடர்பை பின் தொடர்ந்த போது, Rajesh சிக்கிக் கொண்டுள்ளார்.
ஒரு பெண்ணிற்காக இப்படி நான்கு பேரை துடி துடிக்க கொலை செய்துள்ள இந்த சம்பவம் சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது.