காதலி மற்றும் சகோதரர்களால் இளைஞரின் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட கொடூரம்! உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி
கோரக்பூரில் காதலி மற்றும் சகோதரர்களால் இளைஞரின் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட கொடூரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி
உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஒரு படுபயங்கரமான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 வயது இளைஞர் மிதுன் குமார் என்பவர் தனது காதலி மற்றும் அவரது நான்கு சகோதரர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட தோடு, அவரது பிறப்புறுப்பு வெட்டப்பட்டதாக பகீர் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞரின் பெற்றோர் குற்றச்சாட்டு
அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட இளைஞரான மிதுன் குமாரின் பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தங்கள் மகனை அந்தப் பெண் காதல் நாடகமாடி ஏமாற்றியதாகவும், இது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பகையே இந்த வெறி செயலுக்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளைஞரின் காதலியின் வாக்குமூலம்!
இந்நிலையில் அந்தப் பெண் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மிதுன் குமார் இரவு நேரத்தில் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும், தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் இளைஞரின் பிறப்புறுப்பு சேதமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மிதுனின் தந்தை பசந்த் லால் அளித்த புகாரின்படி, பண்ணையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மிதுனை, இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கும் அந்தப் பெண் தொலைபேசியில் அழைத்துள்ளார்.
அந்த அழைப்பை நம்பி பெண்ணின் வீட்டிற்கு சென்ற மிதுனை அந்தப் பெண்ணின் நான்கு சகோதரர்களும் சரமாரியாக தாக்கியதுடன், அவரது கைகளையும் கால்களையும் பலவந்தமாக பிடித்துக் கொண்டு, தங்கள் சகோதரியிடம் மிதுனின் பிறப்புறுப்பை வெட்டும்படி கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்து, அதிக இரத்தப் போக்குடன் இருந்த மிதுனை அவர்கள் வீட்டை விட்டு வெளியே தூக்கி எறிந்துள்ளனர்.
துயரமான மீட்பு
சாலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மிதுனை பார்த்த கிராமவாசி ஒருவர் உடனடியாக அவரது தந்தைக்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த பசந்த் லால் தனது மகனை கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |