வெளியேறியது நடப்பு சாம்பியன் RCB! அதிர்ச்சியில் ஸ்மிரிதி மந்தனா ரசிகர்கள்
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் அணி, 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
லக்னோவில் நடந்த போட்டியில் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தீப்தி ஷர்மாவின் உபி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி அதிரடியாக 225 ஓட்டங்கள் குவித்தது. கடைசிவரை களத்தில் நின்ற ஜார்ஜியா வோல் (Georgia Voll) 99 (56) ஓட்டங்களும், கிரண் நவ்கிரே 46 (16) ஓட்டங்களும் விளாசினர்.
Stamping her authority! 💪
— Women's Premier League (WPL) (@wplt20) March 8, 2025
Grace Harris gets off to a flying start with a flurry of boundaries 🚀
Updates ▶️ https://t.co/pXDVY3MCgZ #TATAWPL | #UPWvRCB | @UPWarriorz pic.twitter.com/hrI3qKMjd5
பின்னர் ஆடிய RCB அணியில் ஸ்மிரிதி மந்தனா 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேகனா 12 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாச, எல்லிஸ் பெர்ரி 28 (15) ஓட்டங்கள் குவித்தார்.
எனினும் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிச்சா கோஷ் 33 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் எடுத்தார்.
Still catching our breath! 😅🔥
— Women's Premier League (WPL) (@wplt20) March 8, 2025
UP Warriorz win a thriller against #RCB by 12 runs to end their #TATAWPL 2025 campaign 🙌
Scorecard ▶ https://t.co/pXDVY3MCgZ #UPWvRCB | @UPWarriorz pic.twitter.com/I7aTmtQaNF
RCB அணி தீப்தி ஷர்மா மற்றும் சோஃபி எக்லெஸ்டோனின் அபார பந்துவீச்சில் 19.3 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஸ்னேக் ராணா 6 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் விளாசினார். இந்த தோல்வியால் நடப்பு சாம்பியனான RCB அணி தொடரில் இருந்து வெளியேறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |