பானிபூரி சாப்பிட வாயை திறந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - வாயை மூட முடியாமல் தவிப்பு
பானிபூரி சாப்பிட அதிகளவில் வாயை திறந்த பெண் வாயை மூட முடியாமல் தவித்துள்ளார்.
பானிபூரியால் நேர்ந்த சோகம்
உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தின் திபியாபூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான இன்கலா தேவி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது மருமகள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வெளியே தனது குடும்பத்தினருடன் இருந்தார்.
அப்போது அங்கிருந்த சாலையோர கடை ஒன்றில் குடும்பத்தினருடன் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பானிபூரி சாப்பிடுவதற்காக அவர் அதிகளவில் வாயை திறந்ததால், திடீரென அவரது தாடை விலகி வாயை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ऐसा पहली बार देखा-सुना!!
— Vivek K. Tripathi (@meevkt) December 2, 2025
गोलगप्पा खाने के लिए महिला ने मुंह खोला.. मुंह कुछ ज्यादा ही खुल गया ..
इतना ज्यादा कि जबड़ा डिसलोकेट हो गया.. मुंह बंद ही नहीं हुआ.. महिला को अस्पताल ले जाया गया जहां डॉक्टर ने उनका जबड़ा सेट किया..
वीडियो औरैया का है..#auraiya #Doctors #golgappa #jaw… pic.twitter.com/PZRSO8nJRO
கடும் வலியால் அவதிப்பட்ட அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவர்கள் ஆரம்பகட்ட சிகிச்சை வழங்கினாலும், அவர்களால் தாடையை சீரமைக்க முடியவில்லை.
இயல்பு நிலைக்கு வந்த தாடை
இதனால், சிறப்புச் சிகிச்சைக்காகச் சிச்சோலி மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள் தாடையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

ஆனாலும், தொடர்ந்து வலியை அனுபவித்து வருவதாகவும், தாடை இயக்கம் முழுமையாகத் திரும்பவில்லை எனவும், கண்காணிப்பு மற்றும் கவனிப்பு தேவைப்படுவதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய மருத்துவர்கள், "திடீரென அதிகமாக வாய் திறப்பது, குறிப்பாக ஒரு கடியில் அதிக அளவு உணவை உட்கொள்ள முயற்சிக்கும்போது இது போன்று நிகழ வழிவகுக்கும்.
சிரிக்கும்போது, கொட்டாவி விடும்போது அல்லது பெரிய ஒன்றைக் கடிக்கும்போது மூட்டுகளில் ஏற்படும் அழுத்தமும் இந்த நிகழ்விற்கு காரணமாக வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |