கோடிக்கணக்கில் சம்பாதித்த யூடியூபர்! ஐ.டி ரெய்டில் சிக்கியது எப்படி?
இந்தியா, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள யூடியூபர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ₹24 லட்சம் பணம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.1 கோடி சம்பாதித்த யூடியூபர்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தஸ்லிம் என்ற நபர் 'டிரேடிங் ஹப் 3.0' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
அவர் தனது யூடியூப் சேனலில் ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை தயாரித்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 24 லட்ச ரூபாய் பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது.
மேலும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தஸ்லிம் பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, கிட்டத்தட்ட ₹ 1 கோடி சம்பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ரெய்டு திட்டமிடப்பட்ட சதி
யூடியூபர் தஸ்லிம் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் அதனை மறுத்துள்ளனர்.
'டிரேடிங் ஹப் 3.0' என்ற யூடியூப் கணக்கை தனது சகோதரர் நிர்வகிப்பதாகவும், வருமான வரியும் செலுத்தி வருவதாகவும் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், அவர் மொத்த யூடியூப் வருமானமான ₹ 1.2 கோடிக்கு மேல் ஏற்கனவே ₹ 4 லட்சத்தை வரியாகச் செலுத்திவிட்டதாக கூறினார்.
"நாங்கள் எந்த தவறான வேலையும் செய்யவில்லை, நாங்கள் எங்கள் யூடியூப் சேனலை நடத்துகிறோம், அதில் இருந்து எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது, இதுதான் உண்மை. இந்த ரெய்டு நன்கு திட்டமிடப்பட்ட சதி" என்று ஃபெரோஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |