சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்த பெற்றோர்: வெளிச்சத்துக்கு வந்த காதலனின் பங்கு
இந்தியாவின் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் பெற்ற மகள்களை நரபலி கொடுத்து பூஜை செய்த சம்பவத்தில் புதிய திருப்பமாக காதலனின் பங்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியினர்.
புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்
. இவர்களின் இளையமகள் சாயி திவ்யா (22) ஏ ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார். மூத்த மகள் அலேக்யா போபாலில் உள்ள மத்திய வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
தற்போது இந்த கொடூர நரபலி விவகாரத்தில் அலேக்யாவின் காதலரின் பங்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவத்தன்று அலேக்யாவை தொடர்பு கொள்ள மொபைலில் பலமுறை முயன்றும் அந்த இளைஞருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஒருகட்டத்தில் மொபைல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிய வரவே, அந்த இளைஞர் அலேக்யாவின் குடியிருப்புக்கு நேரிடையாக சென்றுள்ளார்.
ஆனால் அலேக்யாவின் குடியிருப்புக்கு சென்ற இளைஞருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
உடனடியாக அந்த இளைஞர் பொலிசாருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்து உதவி கோரியுள்ளார்.
இதன் பின்னரே இந்த விவகாரம் வெளியுலகிற்கு தெரிய வந்தது என கூறப்படுகிறது.
