பயனர்களுக்காக UPI 3.0 அறிமுகம்.., நீங்கள் இல்லாத நேரத்திலும் பணம் செலுத்தலாம்
பயனர்களின் நலனுக்காக UPI 3.0 அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
UPI 3.0
UPI-ஐ கட்டுப்படுத்தும் அமைப்பான NPCI, விரைவில் UPI 3.0-ஐ அறிமுகப்படுத்தி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
UPI 3.0 இன் கீழ் loT (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) பயன்படுத்தப்படும். loT என்றால் வீட்டில் இருக்கும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களும் பணம் செலுத்த தகுதி பெறும் அம்சமாகும். இதனால் பணம் செலுத்த ஸ்மார்ட்போன் தேவையில்லை.
இந்தப் புதிய அம்சத்தின் கீழ், UPI Autopay மற்றும் UPI Circle என்ற விருப்பத்தை பெற்று வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் நீங்கள் இல்லாத நேரத்திலும் பணம் செலுத்த முடியும்.
வீட்டில் இருக்கும் டிவி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், கார் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் அனைத்தும் ஸ்மார்ட் முறையில் பணம் செலுத்தும்.
ஒக்டோபர் மாதத்திற்குள் Global Fintech Fest 2025 -ல் UPI 3.0 அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புஇல்லை.
இதன் கீழ், பயனர்கள் பிற ஸ்மார்ட் சாதனங்களில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கும் வரம்பை நிர்ணயிக்கலாம். இதனால் வேறு யாரும் அதை தவறாகப் பயன்படுத்த முடியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |