12 நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்தியாவின் டிஜிட்டல் UPI கட்டண முறை
இந்தியாவின் Unified Payments Interface (UPI) கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
2016-இல் தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய இந்த முறை, இன்று இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதுகெலும்பாக உள்ளது.
2021-22 நிதியாண்டில் 4,595 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்ற நிலையில், 2025-26-இல் இது 24,161 கோடி பரிவர்த்தனைகளாக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனை மதிப்பு ரூ. 314.23 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

நிதி அமைச்சகத்தின் மாநில அமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்ததாவது, தற்போது 55.49 கோடி பயனர்கள் UPI-யில் இணைந்துள்ளனர். பாதுகாப்பை மேம்படுத்த NPCI பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் CUISF 2025 என்ற தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு, மொபைல் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவை அடங்கும்.
மேலும், NPCI International Payments Ltd. (NIPL) மூலம் UPI உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் எளிதாக பரிவர்த்தனை செய்ய முடிகிறது.
தற்போது இந்தியாவின் UPI முறையை பூட்டான், சிங்கப்பூர், UAE, பிரான்ஸ், மொரீஷியஸ், இலங்கை, நேபாளம், கத்தார், கிரீஸ், கம்போடியா உள்ளிட்ட 12 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |