பிரான்சில் இந்தியாவின் UPI சேவை., இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்
பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தில் இந்தியாவின் UPI தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம் பிப்ரவரி 2 அன்று பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸை (UPI) முறையாக அறிமுகப்படுத்தியது.
இப்போது மக்கள் UPI மூலம் ஈபிள் கோபுரத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும், அதுவும் இந்திய ரூபாயில்.
இந்தியாவின் NPCI-இன் அறிவிப்பின்படி, அவர்களின் சர்வதேசப் பிரிவான NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் (NIPL) ஆனது, ஐரோப்பாவில் UPI பேமெண்ட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு வசதியாக பிரெஞ்சு இ-காமர்ஸ் மற்றும் ப்ராக்ஸிமிட்டி பேமெண்ட்ஸ் பிளாட்ஃபார்ம் லைராவுடன் கூட்டு சேர்ந்து Eiffel கோபுரத்தில் சேவையை தொடங்கியுள்ளது
தற்போது ஈபிள் கோபுரத்திற்கு வரும் சர்வதேச பார்வையாளர்களின் இரண்டாவது பாரிய குழுவாக இருக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகள், இப்போது UPI கட்டண முறையைப் பயன்படுத்தி ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
UPI formally launched at the iconic Eiffel Tower at the huge Republic Day Reception. 🇮🇳➡️🇫🇷
— India in France (@IndiaembFrance) February 2, 2024
Implementing PM @narendramodi’s announcement & the vision of taking UPI global. pic.twitter.com/abl7IPJ0To
இந்த பரிவர்த்தனை செயல்முறை விரைவானது, எளிதானது மற்றும் தொந்தரவில்லாதது என விவரிக்கப்படுகிறது, இது வணிகரின் இணையதளத்தில் உருவாக்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்து, கட்டணத்தைத் தொடங்க சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
France Paris, UPI in France, National Payments Corporation of India, NPCI, Lyra, UPI payments in Europe, Eiffel Tower. Indian tourist, Indian Rupees