ஐரோப்பிய நாடொன்றை நடுங்கவைத்த சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது
உப்சாலா நகரில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் மூன்று பேரைக் கொலை செய்த விவகாரத்தில் 16 வயது சிறுவனை ஸ்வீடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வீடு வீடாக விசாரணை
ஸ்டாக்ஹோமிலிருந்து வடக்கே அமைந்துள்ள பல்கலைக்கழக நகரமான உப்சாலாவுக்கு அருகில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் வயது 15 முதல் 20 இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்வீடன் அரசு தரப்பு அறிக்கை ஒன்றில், தீவிர விசாரணை நடந்து வருகிறது. தற்போது தகவல்களைச் சேகரித்து வருகிறோம், மேலும் பொலிசார் வீடு வீடாக விசாரணை நடத்தி சாட்சிகளை விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவமானது குழுக்களுடன் தொடர்புடையதா என்று தொடர்பில் உறுதி செய்வதில் தாமதமாகலாம் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை 25 பேர்
பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 20 வயதுடையவர்கள் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர். அவர்களை உறுதியாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றே பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்வீடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக குழுக்கள் தொடர்பான வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய சராசரியை விட ஸ்வீடனில் துப்பாக்கி இறப்புகள் 2.5 மடங்கு அதிகம். 10.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |