நாவூறும் சுவையில் உப்பு உருண்டை.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் இந்த உப்பு உருண்டையை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் உப்பு உருண்டை இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை அரிசி- 2 கப்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- உளுந்து- ½ ஸ்பூன்
- கடலை பருப்பு- ½ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 4
- உப்பு- தேவையான அளவு
- தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் பச்சை அரிசியை 2 முறை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சை அரிசி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு தாளிப்பு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் இதில் அரைத்த மாவு, உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கெட்டியாகி வரும்வரை கலந்துகொள்ளவும்.
இறுதியாக இது ஆறியதும் சிறிய சிறிய உருண்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான உப்பு உருண்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |