ஜலதோஷம் காய்ச்சலுக்கு மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை
குளிர்காலத்தில் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகளுக்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு பிரித்தானிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு அவசர எச்சரிக்கை
பொதுவாகவே குளிர் காலத்தில் ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படுவது சகஜம்தான்.

இந்நிலையில், அவற்றிற்கான சிகிச்சைக்காக மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது சில விடயங்களை கடைப்பிடிப்பது அவசியம் என பிரித்தானிய மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
கவனத்தில் கொள்ளவேண்டிய ஐந்து முக்கிய விடயங்கள்:
1. ஆல்கஹாலையும் மருந்துகளையும் சேர்க்கவேண்டாம்.
ஆம், குளிர் காலம், அதுவும் பண்டிகைக் காலம் என்றாலே, பொதுவாகவே மக்கள் ஆல்கஹால் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அதேபோல, குளிர் காலத்தில் ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படுவதும் வழக்கம்தான்.
பிரித்தானியாவின் புகலிடக்கொள்கையால் வன்முறையும் உயிரிழப்பும் அதிகரிப்பு: மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை
ஆனால், இந்த ஜலதோஷம், காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகளுக்கான மருந்து மாத்திரைகளும், ஆல்கஹாலும் சேர்ந்தால் ஆபத்து என்கிறது மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு.
2. வலி மாத்திரைகளையும் ஜலதோஷ மாத்திரைகளையும் சேர்த்து எடுக்கவேண்டாம்.
ஜலதோஷம் காய்ச்சலுக்கு பொதுவாக பலரும் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
கூடவே சிலர் வலிக்காக சில மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள நினைக்கலாம். ஆனால், அது ஓவர் டோஸ் ஆகிவிடும் அபாயம் உள்ளது.
3. காலாவதியான மாத்திரைகளை தவிர்க்கவும்
மருந்து மாத்திரைகளைப் பொருத்தவரை, காலாவதி திகதி என்பது முக்கியமான ஒரு விடயம். ஆகவே, எக்காரணம் கொண்டும் காலாவதியான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டாம்.

4. மருந்துகளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து பயன்படுத்தவும்
சில மருந்து மாத்திரைகளை வாங்கும்போது, அவற்றை எப்படி பயன்படுத்தவேண்டும், எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை பின்பற்றுவது அவசியமாகும்.
5. நம் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம்
பக்கத்தில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது உடல் நல பாதிப்பு ஏற்படும்போது, நமக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சாப்பிடுமாறு அவர்களுக்கு பரிந்துரைப்பது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
ஏனென்றால், ஒருவருக்கு பாதுகாப்பான மருந்து அவரது குடும்பத்தில் உள்ள இன்னொருவருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். ஆகவே, நம் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை தவிர்ப்பது நல்லது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |