ரஷ்ய ஜனாதிபதியாக புடினின் மகள்? வற்புறுத்தும் ஆதரவாளர்கள்
ரஷ்ய ஜனாதிபதி புடின், ஆட்சியை அவரது இரண்டாவது மகளிடம் ஒப்படைக்கவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்திவருவதாக நேற்று வெளியான செய்தி ஒன்று கூறுகிறது.
மகளை ரஷ்ய ஜனாதிபதியாக்க புடினுக்கு வற்புறுத்தல்
ரஷ்ய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிலர், புடின் தனது மகளான கேத்தரினாவை (Katerina Tikhonova, 38) தனது வாரிசாக நியமிக்கவேண்டும் என வற்புறுத்திவருகிறார்கள்.
குறிப்பாக, புடினுடைய நண்பரான மிக்காயில், ராஜ குடும்ப பாணியில் புடின் தனது மகளை ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதியாக்கவேண்டும் என கூறிவருகிறார்.
மிக்காயில், ஒரு இயற்பியல் துறை நிபுணரும், ரஷ்யாவின் முன்னணி அணு ஆராய்ச்சி நிறுவனமான Kurchatov Instituteஇன் தலைவரும் ஆவார்.
இந்த கேத்தரினா, புடினுடைய முன்னாள் மனைவியாகிய Lyudmilaவின் மகள் ஆவார். ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றின் தலைவராக பணியாற்றிவரும் கேத்தரினா, ஒரு காலத்தில் பிரபலமான நடனக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |