உடம்பில் யூரிக் ஆசிட் அதிகரித்தால் வரும் பேராபத்து
நம் உடலில் யூரிக் ஆசிட் போதுமான அளவு இருக்க வேண்டும். ஆனால், இந்த யூரிக் ஆசிட் அதிகமாக உற்பத்தியானாலோ அல்லது வெளியேற்றப்பட்டாவிட்டலோ மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிடும்.
ஒரு நாளைக்கு நாம் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அப்போதுதான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் வேலை பளு காரணமாக நாம் தண்ணீர் குடிப்பதை தவிர்த்துவிடுகிறோம். தாகம் எடுத்தால் மட்டுமே நாம் தண்ணீரை குடிக்கிறோம். நம் உடம்பில் நீர்சத்து மிக மிக அவசியம். அந்த சத்து கிடைக்கவில்லையென்றால் பல பிரச்சினைகள் வந்து சேரும்.
யூரிக் ஆசிட் என்பது நாம் சாப்பிடும் பல உணவுகள் மற்றும் பானங்கள் செரிமானமாகும்போது உற்பத்தியாகும். இவை கழிவு பொருளாகும். இந்த கழிவான யூரிக் ஆசிட் நம் உடம்பில் அதிகமாக உற்பத்தியாகக்கூடாது. அப்படி அதிகரித்தால் பிரச்சிதான் வந்து சேரும்.
சரி... கவலைவிடுங்கள்... எப்படி யூரிக் ஆசிட்டை உடம்பிலிருந்து வெளியேற்றுவது என்று பார்ப்போம் -
1. நாம் சாப்பிடும் உணவுகள் மூலம், நம் உடலில் யூரிக் ஆசிட் உற்பத்தியாகி ரத்தத்தில் கரைந்து சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.
2. நாம் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் இந்த யூரிக் ஆசிட் நம் உடம்பிலேயே தங்கி, அதிகப்படியாக உற்பத்தியாகும்.
3. சிறுநீரகம் சீராக இயங்க வேண்டும். அப்படி சிறுநீரகத்தில் பிரச்சினை இருந்தால் யூரிக் ஆசிட் உடலை விட்டு வெளியேறாது. இதனால், ஹைப்பர்யூரிசிமியா பாதிப்பு ஏற்படும்.
4. யூரிக் ஆசிட் உடலை விட்டு வெளியேவில்லயென்றால், அவை சிறுநீரகத்தில் சிறுநீரக கற்கள் உருவாகும்.
5. நிறைய சுத்தமான தண்ணீரை மட்டுமே பருக வேண்டும். அசுத்தமான தண்ணீர் குடித்தால் கூட உடலில் யூரியா ஆசிட் உற்பத்தியாகும்.
6. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சிறுநீர் உடலை விட்டு வெளியேறினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
7. முடிந்தவரை அதிகமாக குளிர்பானங்கள், ஆல்கஹால் குடிப்பது தவிர்க்க வேண்டும்.
8. சிறுநீர்ப்பையிலிருந்து சிறிய கற்கள் வெளியேறி விட்டாலே uric acid crystals-களை தவிர்க்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |