சிறுநீர் கழிக்க இரவில் அடிக்கடி எழுபவரா நீங்கள்? எச்சரிக்கை தேவை
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வது அதிக தண்ணீர் குடிப்பதல் அல்லது மாலை நேரத்தில் குடித்த பானங்கள் போன்றவற்றின் காரணமாக இருக்கலாம்.
சிறுநீர் கழித்தல்
ஆனால் இதனை வயதானதின் இயல்பான விளைவு என்று எண்ணி புறக்கணிக்க கூடாது. ஏனெனில், இது புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படக்கூடிய மாற்றத்தைக் குறிக்கக்கூடும். குறிப்பாக ஆண்களில், இதற்கான பொதுவான மற்றும் முக்கியமான காரணங்களில் ஒன்று புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகுதல்.
இது சிறுநீர்க்குழாயை அழுத்தி, சிறுநீர் ஓட்டத்தை குறைக்கும்.
புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகுதல் பிரச்சனை இன்று மிகவும் சாதாரணமான சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு நிலை. பல ஆண்கள் குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சைகளால் நீண்டகால நிவாரணம் பெறுகின்றனர்.
என்ன பாதிப்பு?
குறிப்பாக, நீர்-நீராவி சிகிச்சை. கட்டுப்படுத்தப்பட்ட நீராவியைப் பயன்படுத்தி அதிகப்படியான புரோஸ்டேட் திசுக்களைச் சுருக்கும். அதேபோல், லேசர் மற்றும் பிற நவீன நுட்பங்களும் சிறுநீர்க்குழாயில் உள்ள அழுத்தத்தை குறைத்து இயல்பான ஓட்டத்தை மீட்டெடுக்க உதவுகின்றன.

சிறுநீர் கழிக்கத் தொடங்குவதில் சிரமம், பலவீனமான அல்லது இடைஞ்சல் ஏற்படும் சிறுநீர் ஓட்டம், அவசர உணர்வு, முழுமையாக கழிக்காத உணர்வு இவை எல்லாம் புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகுவதற்கான பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், நன்றாக தூங்கவும், தினசரி உற்சாகமாகவும் செயல்படலாம்.