பிரித்தானிய தளம் மீது ட்ரோன் தாக்குதல்: எந்தவொரு அச்சுறுத்தலையும்..ஐரோப்பிய ஆணைய தலைவர்
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய விமானப்படை தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, ஐரோப்பிய ஆணைய தலைவர் பதிவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றம்
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடியால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் சூழலில், சைபரஸ் நாட்டில் ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை, அந்நாட்டின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள அக்ரோதிரியில் உள்ள பிரித்தானிய தளம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக, தள அதிகாரிகளும், சைப்ரஸ் அரசாங்கமும் தெரிவித்தன.
இந்த தாக்குதலால் சிறிய சேதம் இருந்தபோதிலும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், கூடுதல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

உர்சுலா வோன் டெர் லேயென்
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வோன் டெர் லேயென் (Ursula von der Leyen) வெளியிட்ட பதிவில்,
"நான் ஜனாதிபதி Nikos Christodoulides உடன் பேசினேன். அக்ரோதிரியில் உள்ள பிரித்தானிய தளத்தை குறிவைத்து ட்ரோன் வான்வழி வாகனம் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, நடந்த ஒற்றை சம்பவம் குறித்து அவர் எனக்கு விளக்கினார்.
சைப்ரஸ் குடியரசு இலக்கா இல்லாவிட்டாலும், நான் தெளிவாக கூற விரும்புகிறேன்: எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும்போது நாங்கள் கூட்டாக, உறுதியாக மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் உறுப்பு நாடுகளுடன் நிற்கிறோம்" என்றார்.

I talked with President @christodulides who briefed me on the single incident that occurred shortly after midnight involving an unmanned aerial vehicle targeting the British base in Akrotiri.
— Ursula von der Leyen (@vonderleyen) March 2, 2026
While the Republic of Cyprus was not the target, let me be clear: we stand…
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |