முகேஷ் அம்பானி வைத்திருக்கும் ஆடம்பர காரை வாங்கிய நடிகை! இந்தியாவிலேயே இவர்தான் முதல் பெண்
ரோல்ஸ் ராய்ஸின் சொகுசு SUV காரை வாங்கிய முதல் இந்திய நடிகை எனும் பெருமையை பெற்றுள்ளார் ஊர்வசி ரவுட்டலா.
ஊர்வசி ரவுட்டலா
பிரபல இந்தி நடிகையான ஊர்வசி ரவுட்டலா, மூன்று நிமிட பாடல் காட்சியில் தோன்றியதற்காக ரூ.3 கோடி ஊதியம் பெற்று பரபரப்பாக பேசப்பட்டார்.
இன்ஸ்டாகிராமின் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று செல்வாக்கான நபர் எனும் பெயரும் பெற்றார் இவர்.
இந்த நிலையில், ஆடம்பர கார் ஒன்றை வங்கியிருப்பதன் மூலம் இந்தியாவில் முதல் நடிகை எனும் பெருமையையும் தற்போது ஊர்வசி ரவுட்டலா பெற்றுள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்
அதாவது விலையுயர்ந்த சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan) என்ற SUV காரை இவர் வாங்கியிருக்கிறார்.
இதன் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். இதனை வாங்கியுள்ள முதல் இந்திய நடிகை இவர்தான். ஆண் பிரபலங்களில் 6 பேர் மட்டுமே இந்த காரினை வைத்துள்ளனர்.
அவர்களில் முதன்மையானவர் பிரபல கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவருக்கு அடுத்து நடிகர்கள் உள்ளனர்.
பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாரூக் கான், விவேக் ஓபேராய், அஜய் தேவ்கன், அல்லு அர்ஜூன் மற்றும் T-Seriesயின் பூஷண் குமார் ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |