திடீரென மயங்கிய பேருந்து ஓட்டுநர்: பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றிய 7 வயது சிறுவன்
அமெரிக்காவில் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் திடீரென மயக்கமாக, உடனே பேருந்தை நிறுத்திய சிறுவனது செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நிலை தடுமாறிய ஓட்டுநர்
அமெரிக்காவின் மிச்சிகன் நகரை சேர்ந்த டில்லன் ரீவ்ஸ், மிச்சிகனின் வாரனில் உள்ள லோயிஸ் இ. கார்ட்டர் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
@facebook
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி லோயிஸ் இ.கார்ட்டர் பள்ளி பேருந்தில் 66 மாணவ மாணவிகள் சென்றுள்ளனர்.
அப்போது வண்டியை ஓட்டிய ஓட்டுநருக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் ஆகியிருக்கிறது. அவரால் தொடர்ந்து வண்டி ஓட்ட முடியாத சூழல் உண்டாகியிருக்கிறது. உடனே மைக்கில் தான் பேருந்தை நிறுத்த போவதாக அறிவித்துள்ளார்.
சிறுவனின் தீர செயல்
பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த டில்லன் ஓட்டுநர் தடுமாறுவதை கவனித்துள்ளார். அப்போது உடனே தாவிக்குவித்து ஓட்டுநர் அருகே வந்த அவர் முதலில் வண்டியை நிறுத்தியுள்ளார்.
பின்னர் 911 என்ற அவசர எண்ணுக்கு யாராவது அழையுங்கள் என கத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவர்கள் அச்சத்தில் அழத் துவங்கியுள்ளனர்.
குவியும் பாராட்டு
உடனே அங்கு வந்த வாரென் பொலிஸ் மற்றும் தீயணைப்பு படையினர் மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் ஓட்டுநர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
@abcnews
இந்த சம்பவத்திற்கு பிறகு லோயிஸ் இ.கார்ட்டர் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், டில்லன் ரீவ்ஸை எல்லோரும் கரகோசம் எழுப்பி பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் நிலை தடுமாறும் போது துணிச்சலாக சிறுவன் வண்டியை நிறுத்தும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.