தனியாக உலகப்போருக்கு தயராகும் அமெரிக்கா - 90 நாள் FORTRESS திட்டம்
US 90-Day War Plan Nuclear Reactors and Survival: உலகப்போர் சூழலுக்கு அமெரிக்கா தீவிரமாக தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் 90 நாள் FORTRESS திட்டம்
‘FORTRESS’ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், அமெரிக்க இராணுவ தளங்கள் 90 நாட்கள் வெளிப்புற ஆதரவின்றி தன்னிச்சையாக இயங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த திட்டம், மின்சாரம், எரிபொருள், தண்ணீர், தொடர்பு வசதிகள் அனைத்தும் பொதுமக்கள் கட்டமைப்பில் சார்ந்திருக்காமல், தனித்துவமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கையடக்க அணு உலைகள், பெரிய அளவிலான பேட்டரி சேமிப்பு, மைக்ரோ கிரிட்கள் போன்ற வசதிகள் உருவாக்கப்படுகின்றன.
மேலும், முக்கிய இராணுவப் பொருட்கள், எரிபொருள், மருத்துவப் பொருட்கள், மின்னணு உபகரணங்கள் போன்றவற்றின் கையிருப்பு சேமிப்புகள் உருவாக்கப்படுகின்றன. அவசர காலங்களில் பொதுமக்கள் தொழிற்சாலைகள் கூட பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை, எதிரிகள் உருவாக்கும் புதிய தொழில்நுட்பங்களை தடுக்க Technology Support Office (TSO) எனும் ரகசிய அமைப்பையும் தொடங்கியுள்ளது. இது ஹாக்கிங் கருவிகள், தவறான கூறுகள் உள்ளிட்ட முறைகளால் எதிரிகளின் ஆயுதங்களை பாதிக்க முயலும்.
இதனுடன், Project Meridian எனும் திட்டத்தின் மூலம் எதிர்காலப் போர்களுக்குத் தேவையான செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், உயிரியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முன்னேற்றங்களை அடைய முயற்சி நடைபெறுகிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், உலகளாவிய போர் சூழ்நிலையில் அமெரிக்க இராணுவம் தற்சார்புடன், நீண்ட காலம் போராடும் திறனை உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |