இளைஞருக்காக ஆண்டுக்கணக்கில் பணத்தை தண்ணீராக செலவழிக்கும் 70 வயது பெண்! காரணம் என்ன தெரியுமா?
அமெரிக்காவை சேர்ந்த 70 வயது பெண் கென்யாவை சேர்ந்த இளைஞரை தீவிரமாக காதலித்து மணந்த நிலையில் பணத்தை அவருக்காக தண்ணீராக ஆண்டுக்கணக்கில் செலவழித்து வருவது தெரியவந்துள்ளது.
பெர்னார்ட் முஸ்யோகி (35) என்ற இளைஞர் கென்யாவை சேர்ந்தவர். இவருக்கும் டிபோரா ஜான் (70) என்ற பெண்ணிற்கும் கடந்த 2017ல் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.
இதன்பின்னர் இது காதலாக மாறியது, வேலையை பெர்னார்ட் இழந்த நிலையில் அவர் கட்ட வேண்டிய பில்கள் அனைத்துக்கான பணத்தை டிபோரா தான் கொடுத்து வருகிறார். இருவரும் இந்தாண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பலரும் டிபோராவின் பணத்துக்காக தான் அவருடன் பெர்னார்ட் பழகுகிறார் என கூறும் நிலையில் அதை மறுக்கும் பெர்னார்ட் தன்னுடைய காதல் உண்மையானது என கூறுகிறார். அவர் கூறுகையில், நான் தான் முதலில் டிபோராவை மணக்க விரும்பினேன், அவரும் அதற்கு ஒப்பு கொண்டார்.
கடந்த 2018ல் அமெரிக்காவுக்கு என் இளவரசியை (டிபோரா) காண செல்ல முயன்றேன். ஆனால் எனக்கு விசா கிடைக்கவில்லை, மீண்டும் 2020ல் விசா மறுக்கப்பட்டது.
இதையடுத்து டிபோரா என்னை சந்திக்க என் நாட்டுக்கே வந்துவிட்டார். பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம், காதலுக்கு வயது தடையில்லை என கூறியுள்ளார்.