ஈரானின் 6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி: விடுக்க ஒப்புக்கொண்ட அமெரிக்கா
US agree to Release Iran’s $6 billion Frozen Funds: ஈரானின் 6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விடுவிக்க அமெரிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதலை முடித்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் கட்ட முன்னேற்றமாக கத்தார் வங்கியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் 6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விடுவிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலின் “சேனல் 12” செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி இது தொடர்பாக இன்று காலை ஈரானுக்கு பயணம் மேற்கொண்டு இருப்பதாகவும், பேச்சுவார்த்தையின் இந்த புதிய திட்ட முன்மொழிவை ஈரானிய அரசிடம் சமர்பித்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் ஈரானிய அரசும் இதற்கு முதல் கட்ட ஒப்புதலை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால் இது தொடர்பாக அமெரிக்காவோ அல்லது ஈரானோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.
பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனைகள்
வெளிநாட்டில் முடக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையின் முக்கிய கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

அத்துடன் ஈரானுக்கு எதிரான சர்வதேச பொருளாதார தடைகள் நீக்குவது மற்றும் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாக திரும்ப பெறுவது ஆகியவை முக்கிய கோரிக்கையாக உள்ளன.