ஹெலிகாப்டர் மூலம் 1,400 கிலோ விஷத்தை வீச அமெரிக்கா திட்டம்!
அரிதான கடற்பறவைகளை காப்பாற்ற, கடலோர தீவுகளில் சுமார் 1,400 கிலோ எடையுள்ள எலி விஷத்தை ஹெலிகாப்டர் மூலமாக வீச அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அரிய கடற்பறவைகளைக் காப்பாற்றும் முயற்சியில், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரை ஆணையம் (California Coastal Commission), ஃபாரலோன் தீவுகளின் தேசிய வனவிலங்கு புகலிடத்தின் மீது எலி விஷத்தை ஹெலிகாப்டர் மூலமாக வீசும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
இந்த திட்டம் தீவுகளில் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும் என ஆணையம் நம்புகிறது.
கலிபோர்னியாவின் கடற்கரையை ஒழுங்குபடுத்தும் இந்த நிறுவனம், வியாழன் இரவு 5-3 என்ற கணக்கில் ஆதரவாக வாக்குகளைப் பெற்றதையடுத்து இந்தத் திட்டத்தை அங்கீகரித்தது.
இத்திட்டத்தின்படி, எண்ணற்ற இனப்பெருக்கப் பறவைகள் வசிக்கும் இந்த சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் உள்ள பாறைத் தீவுகளில் ஹெலிகாப்டர்களில் இருந்து சுமார் 1,360 கிலோ(3,000 பவுண்டுகள்) எலி விஷம் வீசப்படும்.
The government is planning to drop rat poison onto California islands that are home to vulnerable sea mammal + sea bird populations.
— AJ+ (@ajplus) July 11, 2019
It wants to kill off mice brought to the island by boats, but activists say the poison will also kill any animals that eat them. pic.twitter.com/NV3IbtKdMz
இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை பிராந்திய இயக்குநரின் அனுமதியும் தேவைப்படும். அப்படி அனுமதி கிடைத்தாலும், திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஃபாரலோன் தீவுகளின் அடைக்கலத்தில் சுமார் 300,000 இனப்பெருக்கம் செய்யும் கடற்பறவைகள் எலிகளால் அச்சுறுத்தப்படுகின்றன.
அந்த எலிகள் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல்களில் இந்த தீவுக்கு வந்தன. சமீபத்திய ஆண்டுகளில், அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது, இது ஆந்தைகளை ஈர்த்தது. இந்த ஆந்தைகள் எலிகளை மட்டுமின்றி அங்கிருக்கும் அரிய Ashy storm petrel பறவைகளையும் வேட்டையாடுகின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது "மனிதனால் ஏற்பட்ட ஒரு பிரச்சனை. எலிகளால் செய்யப்படும் சுற்றுச்சூழல் அமைப்பு படுகொலைகளை தடுக்க இந்த திட்டம் அவசியம் மற்றும் சரியானது" என்று வனவிலங்கு புகலிடத்தின் மேலாளர் ஜெர்ரி மெக்செஸ்னி (Gerry McChesney) கூறியுள்ளார்.