ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்: வாய் திறக்காத மாஸ்கோ
உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா மோதல்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல கட்ட பொருளாதார தடைகள் விதித்து இருப்பதுடன், ரஷ்ய எண்ணெயை மற்ற நாடுகளும் வாங்க கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த அச்சுறுத்தல்களுக்கு கவலை படாமல் தீவிரமாக சண்டை போட்டு வருகிறார்.
ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட் விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது தொடர்பாக ரஷ்யா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
தரவுகளின் படி, ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் C-17A Globemaster III என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விமானம் நேரடியாக அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு வரவில்லை.
அமெரிக்காவில் உள்ள கேம்ப் ஸ்பிரிங்ஸ் என்ற ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட C-17A Globemaster III விமானம், முதலில் லிட்வியாவில் உள்ள ரிகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளம் அமெரிக்க ஜனாதிபதியின் ஏர் விமானப்படை தளத்தில் முக்கியமானதாகும்.
நேற்று முன்தினம் லிட்வியாவில் இருந்து புறப்பட்ட C-17A Globemaster III விமானம் ரஷ்யாவில் உள்ள வனுகோவா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த C-17A Globemaster III விமானம் அமெரிக்கா விமானப்படையின் ராணுவ தளவாடங்கள், சரக்குகளுடன் நீண்ட தூரம் பறக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |