மத்திய தரைக் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்: 5 ராணுவ அதிகாரிகள் பலி
அமெரிக்க விமானப்படை விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பயிற்சி ஈடுபட்டு இருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானம்
மத்திய தரைக்கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க விமானப் படை விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க ஐரோப்பிய கட்டளை வெளியிட்டுள்ள தகவலில், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நவம்பர் 10ம் திகதி மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க ராணுவம் விமானம் விபத்துக்குள்ளானது என தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்க விமானப் பயிற்சியின் ஒரு பகுதியான வழக்கமான எரிபொருள் நிரப்பும் வழி முறையின் போது ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
A U.S. Air Force plane crashed in the Mediterranean Sea during a training flight. Five US military personnel were killed
— NEXTA (@nexta_tv) November 12, 2023
This was reported by the U.S. European Command.
"On the evening of November 10, an American military aircraft conducting training in the eastern… pic.twitter.com/PwRxfu8dTq
ஞாயிற்றுக்கிழமை விபத்து கூடுதல் தகவல் வெளியிட்ட அமெரிக்க ஐரோப்பிய கட்டளை, வெள்ளிக்கிழமை மாலை விமானம் விபத்துக்குள்ளானது என்றும், அமெரிக்க ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை உடனடியாக தங்களது தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளை தொடங்கின என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |