அமெரிக்க வான்வெளி மீண்டும் திறப்பு: இயல்பு நிலை உடனே திரும்பாது! போக்குவரத்துத் துறை செயலாளர் அறிவிப்பு
US air space reopen after 4 hours ground stop: கிட்டத்தட்ட நான்கு மணி நேர முடக்கத்திற்கு பிறகு அமெரிக்காவின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் போக்குவரத்து துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
மீண்டும் திறக்கப்பட்ட அமெரிக்க வான்வெளி
அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து தடை(Ground stop) மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) நீக்கியுள்ளது.
இந்த தகவலை வெள்ளை மாளிகையின் கிழக்கு நேரப்படி இரவு 8.15 மணிக்கு அந்நாட்டின் போக்குவரத்து துறை செயலாளர் சீன் டஃபி(Sean Duffy) உறுதிப்படுத்தியுள்ளார்.

There are currently 3,100 airborne aircraft bound for US airports amid nationwide ground stop. No additional aircraft are taking off at this time. https://t.co/GGqfb8QXhP
— Flightradar24 (@flightradar24) November 13, 2026
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் முடக்கப்பட்ட வான்வெளியால் ஆயிரக்கணக்கான விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் பயணங்களை கைவிட நேர்ந்ததோடு, லட்சக்கணக்கான பயணிகள் பெரும் குழப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் இயல்பு நிலை எப்போது?
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய சீன் டஃபி, விமான சேவைகள் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பாது என்பதை பயணிகளுக்கு தெரிவித்துள்ளார்.
அனைத்து விமானங்களும் இப்போதே பறக்குமா? என்றால் இல்லை, விமான செயல்பாடுகள் சற்று மெதுவாகவே இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் சீன் டஃபி விளக்கியுள்ளார்.
There has been a temporary telecommunications outage - out of an abundance of caution all flights have been halted. Every flight has been accounted for and international flights will be handled on a case by case basis.
— The FAA ✈️ (@FAANews) November 13, 2026
மேலும் பயணிகள் அவர்களது விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களது பயணங்கள் குறித்த தகவலை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தாமதமான விமானங்களை இயக்குவதற்கு தேவையான விமானிகளும், விமானப் பணிப்பெண்களும் போதுமான அளவில் கிடைப்பதை பொறுத்தே இந்த விமானங்கள் மீண்டும் பயணங்களை தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விமான நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன எனவும், விமான போக்குவரத்து சிக்கல்கள் நாளை காலை முதல் சீர் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.