திருமண விழாவின் மீது ஏவுகணை தாக்குதல்: தெற்கு ஈரானில் கொல்லப்பட்ட 4 பேர்
Us Air Strike has Hit a Wedding Celebration in Iran: ஈரானில் நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண விழாவில் ஏவுகணை தாக்குதல்
தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் சிரிக் மாவட்டத்தில் உள்ள குஹெஸ்டாக் நகரில் நடந்த திருமண விழாவின் போது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் திருமண விழாவில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
Targeting a wedding and slaughtering innocent civilians in Kuhestak, Iran, is the ultimate proof of the utter desperation of the fake defenders of human rights, a repetition of their atrocities in Minab and Lamerd.
— ابراهیم عزیزی (@Ebrahimazizi33) September 1, 2026
Make no mistake: these crimes will not go unpunished. Nothing… pic.twitter.com/3EcHmkxxqZ
செஞ்சிலுவை சங்கம் X தளத்தில் இது தொடர்பாக வெளியிட்ட தகவலில், அமெரிக்காவின் இந்த ஏவுகணை தாக்குதலின் போது ஏற்பட்ட சிதறல்கள் வீடு ஒன்றை கடுமையாக தாக்கியதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் குஹெஸ்டாக் பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து இருப்பதாக ஈரானிய அரசின் அதிகாரப்பூர்வ காணொளி காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக மாகாண ஆளுநர் அகமது நஃபிசி தெரிவித்திருந்த நிலையில் பின்னர் இந்த உயிரிழப்புகள் உயர்ந்துள்ளது.

அமெரிக்க படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈரானிய புரட்சி கர காவல் படையினரை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |