ஈரானில் பதுங்கி இருந்த அமெரிக்க வீரர்: டிரம்ப் வெளியிட்ட உற்சாக தகவல்
ஈரானில் இருந்து அமெரிக்க விமானப்படை வீரர் வெற்றிகரமாக மீட்கப்பட்டு இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா விமானிகள் மீட்பு
இந்த மாத தொடக்கத்தில் ஈரானிய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட போது அதிலிருந்த 2 அமெரிக்க விமானப்படை வீரர்கள் பாராசூட் மூலம் ஈரானிய பகுதிக்குள் விழுந்தனர்.
இந்நிலையில் ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானிய பகுதிக்குள் விழுந்த இரண்டு அமெரிக்க வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப், அந்த வீரர்களின் மன உறுதியை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
மீட்பு நடந்தது எப்படி?
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 2 அமெரிக்க வீரர்கள் ஈரானிய பகுதிக்குள் விழுந்த பிறகு மீட்பு பணியானது 2 கட்டங்களாக தொடங்கப்பட்டது.
முதலில் வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானி சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டார்.
அவருடன் பயணித்த ஆயுத அமைப்பு அதிகாரி ஈரானின் மலைப்பகுதிக்குள் பதுங்கி இருந்ததோடு 24 மணி நேரத்திற்கு மேலாக ஈரானிய அதிகாரிகளிடம் பிடிபடாமல் தப்பியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க படைகளின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆயுத அமைப்பு அதிகாரியும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |